சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் நேற்று (ஜூலை 15) பரவலாக மழை பெய்தது.
சென்னையில் நேற்று இரவு 8 மணிக்குத் தொடங்கிய மழையானது நள்ளிரவு வரை தொடர்ந்தது. அடையாறு, வேளச்சேரி, வடசென்னை பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைக் கண்டு மகிழ்ந்த பொதுமக்கள், சமூக வலைதளங்களில் மழை வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்டு, #chennairains ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கியுள்ளனர்.
வெப்பச் சலனம் காரணமாக நேற்று பல இடங்களில் மழை பெய்ததாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், ஈரோடு, திண்டிவனம், தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வானிலை குறித்த தனது தனிப்பட்ட ஆர்வத்தில் தகவல்களைச் சேகரித்து வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வானிலை குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “காற்று பலமாக வீசும். தூறலைத் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு மழை பெய்யும். மழையை நேசியுங்கள். கடந்த இரண்டு நாட்கள் மழை வரவில்லை என்ற அதிருப்தியை இன்று தூக்கியெறியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். “மழை தற்போது தெற்குப் புறநகர் பகுதிகளான ஓஎம்ஆர், ஈசிஆருக்குத் திரும்பியுள்ளது. பிரதான புயல் கடலைக் கடந்துவிட்டது. இதனால், நகர்ப்புறங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
�,”