Uஇந்த வருடத்தின் இறுதிப் போட்டி!

Published On:

| By Balaji

இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி இன்று (டிசம்பர் 24) நடைபெற உள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடரிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற புள்ளிக்கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளிக்கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

கடந்த புதன்கிழமை (டிசம்பர் 20) கட்டாக்கில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (டிசம்பர் 22) இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியிலும் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி மீண்டும் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் மும்பை அணி அதிக போட்டிகளை இந்த மைதானத்தில் விளையாடி உள்ளது என்பதால் ஹார்த்திக் பாண்டியா, ரோஹித் ஷர்மா ஆகியோருக்குக் கூடுதல் பலம் என்றே கூறலாம்.

இலங்கை அணி தொடர்ச்சியாக 7 டி-20 போட்டிகளில் இதுவரை தோல்வியைத் தழுவியுள்ளது. அதைத் தவிர்ப்பதற்காகப் போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகுந்த சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்தில் இந்திய அணி பங்கேற்கும் இறுதிப் போட்டி இது என்பதால், வெற்றியோடு இந்த ஆண்டை நிறைவுசெய்ய இந்திய அணி மிகுந்த விருப்பத்துடன் இருக்கும்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel