uஇந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published On:

| By Balaji

கிழக்கு இந்தோனேசியாவிலுள்ள மலாக்கு தீவுகளில் நேற்று (ஜூலை 14) 7.3 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் அச்சத்தில் தெருக்களில் அங்குமிங்குமாக சிதறி ஓடினர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடக்கு மலாக்குவிலுள்ள டெர்னேட் நகருக்கு தென்மேற்கு திசையில் 165 கிலோமீட்டர் தொலைவில் மாலை 6.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி மன்சூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவே இருந்தது. நிலநடுக்கத்தால் அச்சமுற்ற மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் ஓடித் திரிந்தனர். நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லபுகா நகரில் நிலநடுக்கத்தால் அச்சமுற்ற மக்கள் மோட்டார் சைக்கிள்களை எடுத்துக் கொண்டு உயரமான பகுதிகளுக்குத் தப்பிச் சென்றனர். மற்றொரு உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரியான இஹ்சான் சுபுர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நிலநடுக்கம் ஏற்பட்டபோது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் இயல்புநிலை திரும்பிவிட்டது. முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் ஏழு பெரும் நடுக்கங்கள் ஏற்பட்டன” என்று தெரிவித்தார்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவில்லை. இதே பகுதியில் கடந்த வாரமும் 6.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஆண்டில் இந்தோனேசியாவில் பலூ பகுதியில் ஏற்பட்ட 7.5 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 2,200 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share