Uஇந்தியாவுக்கு வந்த புதிய ஓப்போ!

Published On:

| By Balaji

+

ஓப்போ நிறுவனத்தின் F9 Pro மாடல் செல்போன் புதிய வசதியுடன் தற்போது இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்திய செல்போன் சந்தையில் கேமராவுக்கு முக்கியத்துவம் கொண்ட செல்போன்களை வழங்கிவரும் செல்போன் நிறுவனங்களில் முக்கியமானது ஓப்போ. தொடர்ந்து புதிய புதிய வசதிகளுடன் தன்னை அப்டேட் செய்துவரும் ஓப்போ முன்னதாக F9 Pro எனும் மாடலை ஆகஸ்ட்டில் அறிமுகப்படுத்தியிருந்தது. பல வசதிகள் அதில் இருந்தாலும் போனின் மெமரி வசதி குறைவாக இருந்தது.

இந்நிலையில் 6ஜி ரேம் உடன் 64ஜிபி அல்லது 128 ஜிபி கூடுதல் மெமரியை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக புதிய மாடலை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. மெமரி வசதியைக் கூட்டியுள்ளதால் இந்த மாடலுக்கு பயனர்கள் அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம், 6.3 இன்ச் திரை,octa-core MediaTek Helio P60 SoC பிராசஸர்,3,500mAh பேட்டரி வசதி, 16 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா போன்ற வசதிகள் கொண்ட இந்த மாடல் சுமார் ரூ. 23,990க்கு விற்பனை ஆகிறது. அதேநேரம் சில கடைகளில் இந்த மாடல் ரூ. 2000 அளவுக்கு கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் புகார்களும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share