இன்று உலக இதய தினம்!
உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலகத்தில் மரணத்துக்கும் ஊனத்துக்கும் மாபெரும் காரணமான இதயக்குழல் நோய்களைப்பற்றி மக்களுக்குத் தெரிவிப்பது இந்த நாளின் நோக்கமாகும். இதயம் சார்ந்த நோய்களைத் தடுத்துக் குறைக்கும் விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது. புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடல் செயல்பாடு இன்மை ஆகிய ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்த இந்த நாள் மக்களை ஊக்குவிக்கிறது.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை இடைவிடாது இயங்கிக்கொண்டு இருப்பது இதயமே. எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக சென்று ஆரோக்கியமாக வாழ்வதற்கு இதயமே உறுதுணையாக இருக்கிறது.
உடலின் பல பாகங்களில் இருந்து இதயத்திற்கு வரும் அசுத்த ரத்தம் இதய இயக்கத்தால் நுரையீரலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இதயத்திற்கு வந்து இங்கு இருந்து உடலின் மற்ற பாகத்திற்கு செல்கின்றன.
இதயம் பற்றிய 10 முக்கிய தகவல்கள் இதோ:
1. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
2. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 1 லட்சம் தடவைகளும், ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.
3. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி – நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
4. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்ப் பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டர்கள்)
6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவுதான் இருக்கும்.
8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
9. நாம் இதயத்தின் மேல் கை வை என்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம். ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரையீரலுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும். எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
– காவேரி மருத்துவமனை
**விளம்பரக் கட்டுரை**
�,