Uஆரவுடன் இணைந்த பாகுபலி பிரபலம்!

public

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று( ஜூன் 23) ஆரம்பமானது. வித்தியாசமான போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ்-3 நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரு சீசனிலும் பங்கேற்ற பல போட்டியாளர்களுக்கு இந்த நிகழ்ச்சி பிரபலத்தையும் பல வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. அந்த வகையில் முதல் சீசனில் பங்கேற்று வெற்றிபெற்ற ‘ஆரவ்’விற்கு பல திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது சரண் இயக்கத்தில் உருவாகிவரும் ஒரு திரைப்படத்தில் ஆரவ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சரண் அஜித் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், விக்ரம் நடித்த ஜெமினி, மாதவன் கதாநாயகனாக நடித்த ‘ஜே ஜே’ போன்ற பல திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரவ் கதாநாயகனாகும் இப்படத்திற்கு ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில், பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகத்தில் ‘காளகேய மன்னன்’ வேடத்தில் நடித்த பிரபாகரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாகுபலி திரைப்படத்தில், பிரபாகரனின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது அவர் நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்திலும் பாகுபலி போன்றே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். எஸ்.மோகன் தயாரிக்கும் திரைப்படத்தில் பிரபாகரன் அகோரி வேடத்தில் நடிக்கிறார்.

கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சைமன் கே.சிங் இசையமைக்கிறார். தெலுங்கு திரைப்பட நடிகை காவ்யா கதாநாயகியாக நடிக்கும் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’படத்தில் ராதிகா சரத்குமார், சாயாஜி ஷிண்டே, ரோகினி, யோகிபாபு, சாம்ஸ், நாசர், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. ‘டான்’ போன்ற தோற்றத்தில் கெத்தாக ராதிகா உட்கார்ந்து சுருட்டு பிடிக்க, அருகில் ஆரவ் நிற்பது போன்ற அந்த போஸ்டர், விமர்சனத்திற்குள்ளானது.

இறுதிகட்ட படப்பிடிப்புப் பணிகள் நடந்து வரும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

**

மேலும் படிக்க

**

**[தேர்தல் வராமலேயே ஆட்சி மாற்றம்: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/24/44)**

**[சட்டமன்றம்; தயாராகும் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/24/24)**

**[பிக் பாஸ் 3: ஷெரின் ஆர்மி ரெடி!](https://minnambalam.com/k/2019/06/24/23)**

**[அதிமுகவுக்கு யெஸ், திமுகவுக்கு நோ சொன்ன தங்கம்](https://minnambalam.com/k/2019/06/23/136)**

**[சோதனைக் காலத்தில் வந்த வாரிசு: விஜய பிரபாகரன்](https://minnambalam.com/k/2019/06/24/5)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *