Uஅரசுப் பள்ளிகளில் புதிய சீருடை!

Published On:

| By Balaji

அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்குப் புதிய சீருடைகளை அறிமுகம் செய்துள்ளது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை.

தற்போது அரசுப் பள்ளிகளில் வழக்கத்திலுள்ள சீருடைகளை விடுத்து, புதிய சீருடைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது தமிழகப் பள்ளிக்கல்வித் துறை. இதன் தொடர்ச்சியாக, வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் மாணவ மாணவியருக்கு வழங்கப்படவுள்ளன. சத்துணவு உண்ணும் 40 லட்சத்து 66 ஆயிரத்து 217 மாணவ மாணவியர் இலவச சீருடைகளைப் பெறவுள்ளனர்.

இது தொடர்பாக, இன்று (மே 20) தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்கள் திகழும் வகையில் தனிக் குழு அமைக்கப்பட்டு இந்த ஆடைகள் வடிவமைக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வரும் 2019-20ஆம் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கரும்பச்சை நிறத்தில் கால் சட்டையும் இளம் பச்சை நிறத்தில் கட்டமிட்ட மேல் சட்டையும் வழங்கப்படும். மாணவிகளுக்கு இதே நிறத்தில் புதிய சீருடை வழங்கப்படும். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சந்தன நிறத்தில் கால் சட்டையும், அதே நிறத்தில் கட்டமிடப்பட்ட மேல் சட்டையும் வழங்கப்படும். மாணவிகளுக்கு சந்தன நிற கோட்டுடன் கூடிய சீருடை வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த அறிவிப்பு அனுப்பப்படவுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)

**

.

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share