சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், ‘தமிழகத்தில் கரூர், சேலத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட், மதுரை, வேலூர் , உள்ளிட்ட மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் குறைந்தபட்சமாக 82 டிகிரி பாரன்ஹீட்
வெப்பம் பதிவாகியுள்ளது. தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் ஈரப்பதம் குறைந்த தரைக்காற்று
தொடர்ந்து வீசுகிறது. இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்களான மதுரை, திருச்சி, ஈரோடு, வேலூர் ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
�,
+1
+1
+1
+1
+1
+1
+1