அவெஞ்சர்ஸ் படத்துல வந்தேறி தேனோஸை முப்பாட்டன் முருகனின் படைகள் எப்படி அடிச்சு வெரட்டுறாங்கன்னு பாக்குறதுக்காக தியேட்டருக்குக் கிளம்புனேன். உயிர் பயத்தால வண்டியை கொஞ்சம் பொறுமையாவே ஓட்டிட்டு படம் போடுற டைமை விட 5 நிமிசம் லேட்டாவே போனேன். தியேட்டருக்குள்ள நுழைஞ்சு பாத்தா 5 நிமிச படம் ஓடிருச்சு. கோவத்துல ஆப்ரேட்டரை புடிச்சு ஏன்யா சீக்கிரம் படத்தைப் போட்டுட்டன்னு கேட்டா, சரியான டைமுக்குத்தான் போட்டோம்னார். கவர்ன்மெண்ட் விளம்பரம் எல்லாம் போட்டு 5 நிமிசம் கழிச்சு தான் படம் ஸ்டார்ட் பண்ணுவீங்கன்னு உயிரைக் காப்பாத்திக்க லேட்டா வந்தா, விளம்பரம் போடாமலே படத்தை போட்ருக்கீங்களான்னு நியாயத்தை தான் கேட்டேன். அரசாங்கத்துல இருந்தே விளம்பரத்தை எடுக்க சொல்லிட்டாங்கப்பா. அடுத்த விளம்பரம் வர்ற வரைக்கும் வெயிட் பண்ண சொல்லிருக்காங்கன்னாரு. ஓ அடுத்த விளம்பரத்துக்கு வேற ரெடியாகுறீங்களா, சோஃபா மேல கையை வெச்சா மொத டெட்பாடி நீதான்னு வடிவேலு சொல்றமாதிரி சொல்லிட்டு திரும்பிப் பாத்தா ‘இங்கே எச்சில் துப்பாதீர்கள்’னு வெச்சிருந்த போர்டைக் காணோம். ஏன் அந்த போர்டை எடுத்துட்டீங்கன்னு கேட்டா, இனி அது தேவைப்படாதாம். சரி, தூக்கி போட்றாதீங்க. பத்திரமா வைங்கன்னுட்டு வந்தேன். வந்தேறி தேனோஸை விரட்டுனாங்களா, இல்லையான்னு கேக்குறீங்களா? படத்தோட கதையை சொல்லமாட்டேன்னு பிளாக் விடோ மேல சத்தியம் பண்ணிருக்கேன். அதனால தியேட்டருக்கு போய் படம் பாருங்க மக்களே. இப்ப அப்டேட்டைப் படிங்க.
**@madurai_jinna**
எம்ஜிஆர் படத்தை பார்த்தால் குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வார்கள் – அமைச்சர் செல்லூர் ராஜூ
எம்.ஆர் ராதா
படங்களை பாருங்கள்.,
குற்றம் செய்யாமலே
வாழ பழகிக் கொள்வீர்கள்.!
**@sultan_Twitz**
‘எடப்பாடி சாமிக்கு அர்ச்சனை’ விளம்பரத்தை நீக்க தமிழக அரசு உத்தரவு – செய்தி #
ஏன்யா… இப்டி பொசுக்குனு நிறுத்திப்புட்டீங்க காமெடி நல்லாதான இருக்கு..!!
**@imparattai**
அதிமுகவினர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்ல-தம்பிதுரை.
ஆமாங்க சார், மக்களைபற்றியும், மக்கள் பிரச்சனைபற்றியும் மட்டுமே அக்கறையுள்ள தெய்வங்கள்னு, கூவத்தூர்ல தங்கி நிரூபிச்சது மக்களுக்கே தெரியுமே.
**@ajmalnks**
நாரதரின் லேட்டஸ்ட் வெர்ஷன் தான் கூகுள் – குஜராத் முதல்வர் விஜய் ரூபானி.
பக்கோடா பாய்ஸ் எல்லோரும் செல்லூரு பங்காளியாகவே இருக்காங்களே….
**@ShivaP_Offl**
வெறுங்கையோடு சென்று ICUவில் இருப்போரை பார்த்துவிட்டு ஆறுதல் சொல்கிறோம்,
கிடாவெட்டு விருந்துக்கு சென்றால்கூட கிப்ட்டோ அல்லது கவரில் பணம்வைத்தோ கொடுக்கிறோம்,
பணத்திற்க்கு தேவையிருக்கும் இடத்தில் ஆறுதலும்,அன்பு தேவைப்படும் இடத்திலே பணத்தையும் கொடுக்கிறோம்
**@Vela19809794**
முன்னாடி எல்லாம் ஒரு செய்தி உண்மையா இல்லையான்னு நியூஸ் சேனலை பாத்து தெரிஞ்சிகுவோம்,,,!!!
ஆனால் இப்போ நியூஸ் சேனல்கள் சொல்லுவது உண்மையா இல்லையான்னு எத பாத்து தெரிஞ்சுகிறது,,?????
**@yugarajesh2**
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது-நிர்மலா சீத்தாராமன்
என்னமோ இதுக்கு முன்னாடி எல்லாரிடமும் கருத்துகேட்டு செயல்பட்ட மாதிரியே பீலா விடுறது.
**@BlackLightOfl**
எம்ஜிஆர் படத்தை பார்த்தால் குற்றம் செய்தவர்கள் திருந்தி வாழ்வார்கள். – அமைச்சர் செல்லூர் ராஜூ
அப்புறம் ஏன் பாஸ்.. ஜெயலலிதாவை குற்றவாளின்னு நீதிமன்றம் சொல்லுச்சு.!!
**@ajmalnks**
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அர்ச்சனை விளம்பரத்தை திரையரங்குகளில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது- அமைச்சர் ஜெயக்குமார்
சாமியின் ஆட்சியில் சாமிக்கே சோதனையா?
**@CreativeTwitz**
மூட்டு மாற்று சிகிச்சைக்காக பாபா ராம்தேவ் லண்டன் பயணம் – செய்தி!
சில விஷயத்தை வெள்ளைப்பூண்டாலயே காப்பாத்த முடியாது
**@mekalapugazh**
குழந்தைக்குச் சிக்கனத்தை நீங்கள் பழக்கப்படுத்துங்கள்..
செலவு செய்ய அவனாகவே கற்றுக்கொள்ளட்டும்.
**@ajmalnks**
உபியில் 11 லட்சம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி-செய்தி
தோல்வி விகிதம் ரொம்பவும் கம்மியா இருக்கே….
**@Kozhiyaar**
வாழ்க்கை அடித்து துவைப்பதால் தான் வெளுத்து விடுகிறதோ தலைமுடி!!?
**@nelsonvijay08**
நீ இன்ன சாதியில் பிறந்ததால் சட்டை, செருப்பு அணியக் கூடாது, காலனியில் இருப்பதால் ஊருக்குள் நுழையக் கூடாது போன்றதன் அப்பட்டமான வரலாற்றுத் தொடர்ச்சிதான்
‘உங்கள் கிராமம் சுத்தமாக இல்லையென்றால் இலவச அரிசி கிடையாது’ என்னும் புதுவை ஆளுநர் கிரண்பேடியின் அறிவிப்பு.
**@senthilcp**
டாக்டர் ,எனக்கு ஏதாவது டென்சன்,்னா நெய்ல் பாலீஸ் ரிமூவ் பன்னிட்டு அகெய்ன் நெய்ல்பாலீஸ் அப்ளை பன்னுவேன் அகெய்ன் ரிமூவ் அகெய்ன் பாலீஸ் அப்ளை இப்டி பன்னிட்டே இருந்தா டென்சன் குறைஞ்சிடுமாமே?நிஜமா?
ஏம்மா மின்னல்.இப்டி செஞ்சா நெய்ல் பாலீஸ் தான் குறையும்,டென்சன் எப்டி குறையும்?
**@Suba_Vee**
உலகில் மிகவும் மாசடைந்துள்ள 20 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளனவாம். அந்தப் பதினான்கில் ஒன்று கூடத் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், திராவிட ஆட்சியில் தமிழகம் பின்னடைந்து விட்டது என்னும் சத்தம் மட்டும் காதைப் பிளக்கிறது.
**@Thaadikkaran**
பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்: ஜெயக்குமார்
எப்படி சாரே, ஒரு இடத்துல மூடிட்டு மூணு இடத்துல திறக்குறதா
-லாக் ஆஃப்
�,”