பிரபல சூப்பர் ஹீரோவான பேட்மேன் கதாபாத்திரத்தில் ராபர்ட் பேட்டின்சன் நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பேட்மேன் ரசிகர்கள் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு பெட்டிஷன் அனுப்பியுள்ளனர்.
வார்னர் பிரதர்ஸ்ஸின் பிரபல டி.சி காமிக்ஸ் கதாபாத்திரமான பேட்மேனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட தி டார்க் நைட் ட்ரையாலஜி உலகமெங்குமுள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. நோலன் இயக்கத்தில் கிறிஸ்டியன் பேல் பேட்மேனாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு வெளியான பேட்மேன் vs சூப்பர் மேன் படத்தில் பென் அஃப்லெக் பேட்மேனாக நடித்திருந்தார். ஆனால், ரசிகர்களால் அவரை தங்கள் ஆதர்சமான பேட்மேனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், ஜூன் 2021 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள பேட்மேனின் அடுத்த பாகத்திற்கான கதாநாயகனாக நடிக்க சில இளம் நடிகர்களின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அதில் முன்னணியாக இருப்பது ராபர்ட் பேட்டின்ஸன். ‘ட்வைலைட்’ படத்தின் பாகங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் பேட்மேனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானவுடன் ரசிகர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதில் உச்சகட்டமாக 4500க்கும் அதிகமானோர் சேஞ்ச் (change.org) என்ற அமைப்பின் வலைதளத்தில் ‘வார்னர் பிரதர்ஸ் இதை செய்யாதீர்கள். ராபர்ட் பேட்டின்ஸனை பேட்மேனாக நடிக்க வைக்காதீர்கள்’என பெட்டிஷன் போட்டு வருகின்றனர்.
இன்னும் வார்னர் பிரதர்ஸ் அதிகாரப்பூர்வமாக யார் அடுத்த பேட்மேன் என அறிவிக்காத நிலையில், ரசிகர்களின் விருப்பத்தை அறிந்து கொள்வதற்காக அந்நிறுவனமே இச்செய்திகளை வெளியிட்டிருக்கலாம் எனவும் ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
.
�,”