uஅஜீத் – விஜய்: யார் டாப் என்று அறிய வேண்டுமா?

Published On:

| By Balaji

டிஜிட்டல் டைரி! 19 – சைபர் சிம்மன்

அஜீத், விஜய், இருவரில் யாருக்கு அதிக ரசிகர்கள்? பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய இருவரில் யாருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம்? இது போன்ற கேள்விகள் சுவாரஸ்யமானவையே தவிர, இவற்றுக்கான தீர்மானமான பதில் பெறுவது அத்தனை எளிதல்ல. இந்தக் கேள்விகளைவிட இவற்றுக்கான பதில்கள் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்திவிடக்கூடியவை.

ஆனால், இது போன்ற கேள்விகளை நீங்கள் எழுப்ப விரும்பினால், [வோட்டிஃபை](https://vottify.com/#/) இணையதளம் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். ஏனெனில், இந்தத் தளம் இரு தரப்பு மோதல் சார்ந்த விஷயங்களுக்கு இணையம் மூலம் வாக்கெடுப்பு நடத்த வழி செய்கிறது.

சமூக ஊடகங்களில் சிறந்தது பேஸ்புக்கா, ட்விட்டரா?, வேகமான பிரவுசர் ஃபயர்ஃபாக்ஸா, குரோமா?, வலுவான பாத்திரம் பேட்மேனா, சூப்பர் மேனா?… என்பன போன்ற கேள்விகள் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள மோதல் வாக்கெடுப்புகளை இந்தத் தளத்தில் காணலாம். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். இணையவாசிகள் அளிக்கும் பதில்களுக்கு ஏற்ப வாக்கெடுப்பின் முடிவு அமையும்.

நீங்கள் விரும்பினால், இதே போன்ற வாக்கெடுப்பை உருவாக்கி இந்த தளத்தில் சமர்பிக்கலாம். வாக்கெடுப்பை உருவாக்குவதும் எளிதானதே. இதற்கான பகுதியில் கிளிக் செய்தால், இரண்டு காலிக் கட்டங்களைக் கொண்ட மோதல் பக்கம் தோன்றுகிறது. அதில் நீங்கள் விரும்பும் இரண்டு படங்களைச் சமர்பித்து, உங்களுக்கான வாக்கெடுப்பை உருவாக்கிக்கொள்ளலாம்.

நீங்கள் உருவாக்கும் வாக்கெடுப்பைச் சமூக ஊடகங்களிலும் பகிர்ந்துகொள்ளலாம். வாக்கெடுப்பு எத்தனை நாட்களுக்கு இருக்க வேண்டும் என்பதையும் நிர்ணயித்துக்கொள்ளலாம்.

இந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள வாக்கெடுப்புகள் படு சுவாரஸ்யமாக இருக்கின்றன.

**செயலியின் மூலம் போக்குவரத்து விதிமீறல் புகார்**

சாலையில் செல்லும்போது போக்குவரத்து விதிமீறலைக் காண நேர்ந்தது என்றால், இனி நீங்கள் உங்களுக்குள் புலம்ப வேண்டியதில்லை. சம்பவ இடத்திலிருந்தே இது தொடர்பாக போக்குவரத்துக் காவல் துறைக்குப் புகார் செய்யலாம்.

இதற்கான செயலியைச் சென்னை பெருநகரக் காவல் துறை உருவாக்கியுள்ளது. “GCTP Citizen Services” என்ற பெயரில் இந்தச் செயலி அறிமுகம் ஆகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்காக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்தச் செயலியில் உள்ள காமிரா மூலம் பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறலைப் படம் பிடித்து சமர்பிக்கலாம்.

இப்படிப் பெறப்படும் புகாரின் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுக்கும். ஆனால், ஏற்கனவே எடுத்த படங்களை இந்தச் செயலியில் அனுப்ப முடியாது. இந்த செயலியில் உள்ள காமிரா மூலம் எடுக்கும் படங்களை மட்டுமே சமர்பிக்க முடியும்.

**

மேலும் படிக்க

**

**

[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)

**

**

[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)

**

**

[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)

**

**

[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)

**

**

[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share