இராமானுஜம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நாயகனாக நடித்துள்ளபடம் நேர்கொண்ட பார்வை. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆகஸ்ட் 8-ம் தேதி நேர்கொண்ட பார்வை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
.முதலில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது படக்குழு. அரசு விடுமுறை, விஷேச நாட்கள் விடுமுறை என தொடர்ந்து ஒரு வார கால விடுமுறை வருவதால் தற்போது 2 நாட்கள் முன்பாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு தரப்புமுடிவு செய்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அஜீத் நடிப்பில் கடந்த காலங்களில் வெளியான எந்த நேரடி தமிழ் படமும் 35 கோடி ௹பாய் வருவாய்க்கு மேல் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்ததில்லை. இவ்வருட தொடக்கத்தில் அஜீத் – நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
சினிமா வியாபாரங்கள் சம்பந்தபட்ட நடிகர் எவராகயிருப்பினும், அவர் நடித்த முந்தைய படத்தின் மூலம் கிடைத்த வசூல் அடிப்படையில் தான் புதிய படத்தின் விலை நிர்ணயிக்கப்படும். வெற்றி பெற்ற நடிகரின் முந்தையப் படம் வெளியான காலம், வெற்றி பெற்றதற்கான அடிப்படை காரணங்களை தயாரிப்பாளர்கள் யோசிப்பதில்லை.
விஸ்வாசம் படத்திற்கு தியேட்டர் மூலம் தமிழ்நாட்டில் கிடைத்த வருமானத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் விலையாக கூறி வருகின்றனர் தயாரிப்பாளர்கள் தரப்பில். தமிழ்நாடு உரிமை 50 கோடி ரூபாய் என தயாரிப்பாளர் தரப்பில் விலைகூறியதைக் கேட்டு விநியோகஸ்தர்கள் தரப்பில் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நேர்கொண்ட பார்வை புற நகர் பகுதிகளில் மக்களால் புரிந்து கொள்வது சிரமம் என்பதால் நகர்புறங்களில் மட்டுமே அதிக பட்ச வசூலை எதிர்பார்க்க முடியும். அதனால் அதிக பட்சமாக 40 கோடி வரை நேர்கொண்ட பார்வை படத்தை வாங்கலாம் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.
அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் என்ற இந்திப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,
**
மேலும் படிக்க
**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
�,”