gதடுப்பூசிகளின் கொள்முதல் விலை உயர்வு!

Published On:

| By Balaji

^

இரண்டு தடுப்பூசிகளும் தலா ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தடுப்பூசிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் முழு பயன்பாட்டில் உள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனமும், கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகின்றன. இந்த இரு தடுப்பூசிகளையும் ஒரு டோஸ்க்கு 150 ரூபாய் என்ற விலையில் ஒன்றிய அரசு கொள்முதல் செய்து வந்தது.

ஒரு டோஸூக்கு 150 ரூபாய் என்ற கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என்றும், ஒரு டோஸூக்கு 150 ரூபாய் அளித்தால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது கடினம் என தடுப்பூசி நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை ஒன்றிய அரசு இறுதி செய்துள்ளது. அதன்படி கோவிஷீல்டு ரூ.215க்கும், கோவாக்சின் ரூ.225க்கும் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இதுவரை இந்தியாவில் 40.31 கோடி தடுப்பூசிகள் பயனர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share