சுந்தர்.சியின் இருட்டு, சித்தார்த்தின் அருவம் ஆகிய இரண்டு படங்களும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சித்தார்த் நடித்துள்ள அடுத்த படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், கேத்ரீன் தெரசா நடித்துள்ளனர். சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். *அருவம்* எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், தலைப்புக்கேற்றபடி ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
அருவம் படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ள நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி, இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. அதே சமயம், சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சுந்தர்.சி நாயகனாக நடித்திருக்கும் படமும் அதே தேதியில் வெளியாகவிருக்கிறது.
வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் *இருட்டு*. முழுக்க ஹாரர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருட்டு படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியிடுகிறது.
ஒரே நாளில் வெளியாகும் இரண்டு ஹாரர் படங்களால், ஹாரர் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
�,