இந்தியாவில் ட்விட்டர் பயனாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காகும்

Published On:

| By admin

உலக அளவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். இந்த தளத்தை ரூ.3.36 லட்சம் கோடி கொடுத்து வாங்கியுள்ளார் உலகின் முன்னணி பணக்காரர் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது. டிவிட்டரின் மிகப்பெரிய பயனர் தளம் அமெரிக்கா ஆகும், 7.69 கோடி பயனர்கள் உள்ளனர் அதனை தொடர்ந்து ஜப்பானில் 5.89 கோடி பேர் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 2.36 கோடி பயனர்கள் உள்ளனர்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய செய்தி உறுதியானது முதல் ட்விட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சு அதிகரிக்கக்கூடும் என்று தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள் ஏனெனில் ‘பேச்சு சுதந்திரத்தை விரும்புபவன் நான்’ என வெளிப்படையாகவே மஸ்க் சொன்னது தான் இதற்கு காரணம்.

இது குறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், “பேச்சு சுதந்திரம் என்பது சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் பொருந்தும் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். சட்டத்தை மீறும் சென்சார்ஷிப்புக்கு நான் எதிரானவன். பேச்சு சுதந்திரத்தை குறைக்க வேண்டும் என விரும்பும் மக்கள் அதற்கான சட்டத்தை இயற்ற சொல்லி அரசினை அணுகலாம். சட்டத்தை மீறுவது மக்களின் விருப்பத்துக்கு நேர் எதிரானது” என்று தெரிவித்தார் எலான் மஸ்க்.

இதுகுறித்து ட்விட்டர் முன்னாள் இந்திய தலைவர் மணீஷ் மகேஸ்வரி கூறுகையில் டுவிட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் தலைமையில் ட்விட்டர் பயனர்களின் வளர்ச்சியை அதிகரிக்க இந்தியா தொடர்ந்து ஒரு முக்கியமான சந்தையாக இருக்கும். கூடிய விரைவில் இந்தியாவில் ட்விட்டர் பயனாளர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் என்று கூறியுள்ளார்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share