தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேசுவரன் (27) மீனவர். இவருக்கும் நிஷா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரேவதி சஞ்சனா என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது.
நேற்று (அக்டோபர் 28) இரவு, இந்த குழந்தையின் பெற்றோர், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் தொடர்பான செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தனது குழந்தை காணாமல் போகவே அக்கம் பக்கத்தில் தேடினர். மேலும், தனது வீட்டின் கழிவறையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை ரேவதி சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்து மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். சுஜித் இறந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு சோகம் ஏற்பட்டுள்ளது தமிழக மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.�,