xசீனிவாச திருக்கல்யாணம் – சென்னையில் வைபோகம்!

public

கல்யாணம் என்றாலே கொண்டாட்டம் சந்தோஷம். நம் வீட்டில் நம் குடும்பத்தில் நம் உறவுகளில் நம் நட்பு வட்டத்தில் யாருக்கேனும் கல்யாணம் என்றால் அந்த பரவச பரபரப்பு நம்மை அறியாமல் நம்மை தொற்றிக்கொள்ளும்.
சாதாரண மனிதர்களின் கல்யாணத்துக்கே இத்தனை சந்தோஷம் என்றால், கல்யாண குணங்களின் நாயகன் புவனத்தின் புருஷோத்தமனான திருமாலின் கல்யாணம் பெருமாளின் கல்யாணம் எப்படிப்பட்டதாக இருக்கும்!
அனைத்து நற்பலன்களையும் நற்குணங்களையும் அளிக்கும் கல்யாண அதிபதியான திருப்பதி சீனிவாச பெருமாள் – பத்மாவதி தாயார் கல்யாண உற்சவம் தினம் தினம் திருமலை திருப்பதியில் நடந்தேறும். நித்திய கல்யாண நாயகனாகிய பெருமாளுக்கு தினம் தினம் இந்தக் கல்யாண உற்சவம் நடப்பதை பார்ப்பதற்கு நம் கண்களின் ஒவ்வொரு அணுவும் ஆயிரம் கோடி அலகுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
பெருந்தொற்று காரணமாக 2020 முதல் திருமலை திருப்பதியில் நித்ய கல்யாண உற்சவம் பக்தர்களின் பங்கேற்பு இன்றி நடந்து வந்தது. அதன் பிறகு சில மாதங்களில் பக்தர்கள் ஆன்லைன் மூலம் ஆனந்த கல்யாண உற்சவத்தை அனுபவிக்க முடிந்தது.
இப்போது தொற்றுக் காலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்ட நிலையில்… திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச பெருமாள் – பத்மாவதி தாயார் கல்யாணத்தை தமிழகத்தின் முக்கிய இடங்களிலும் நிகழ்த்த முடிவு செய்துள்ளது.
அதன்படி 14 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் திருப்பதி பெருமாளின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பது நமது நம்பிக்கை. இப்பொழுது சென்னை தீவுத்திடல் சென்றால் திருப்பதி பெருமாளும் தாயாரும் அங்கே வந்து கல்யாண உற்சவ தரிசனம் தந்து நம்மை அருள்பாலிக்க வருகிறார்கள்.
திருப்பதி பயணம் என்பது என்னதான் நாம் திட்டமிட்டாலும், பெருமாள் திருவுள்ளம் வைத்தால்தான் நடக்கும். லட்சக்கணக்கான பக்தர்களிடையே காத்திருந்து கண நேரம் கண்ணிமைக்காமல் ஏழுமலையானை தரிசித்துவிட்டு திரும்புவோம். அந்த ஏழுமலையான் தன் கல்யாணக் காட்சியை நமக்காக சென்னையிலேயே நிகழ்த்த சித்தமாய் உள்ளார்.
**ஏப்ரல் 16ஆம் தேதி மாலை 7 மணிக்கு சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம். இது உங்கள் வீட்டு கல்யாணம், நம்ம வீட்டு கல்யாணம்**
கல்யாண குணங்களின் நாயகனான சீனிவாச பெருமாள் – பத்மாவதி தாயார் திருக்கல்யாண காட்சியைக் கண்டு மகிழ வாருங்கள். கர்ம வினைகள் தீருங்கள்!

.

**விளம்பரப் பகுதி **

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0