திருப்பதியில் கனமழை காரணமாக, பெருவெள்ளம் ஏற்பட்டு, கோயில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து கொண்ட நிலையில், கனமழை நிற்கும் வரை கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் வர வேண்டாம் என்று கோயில் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக செல்வதற்கு பயன்படுத்தப்படும் மலை பாதைகளும் கனமழை காரணமாக அடைக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி – திருமலை இடையேயான சாலை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் பதிவு செய்த பக்தர்கள் மழை நின்ற பிறகு எப்போது வந்தாலும், தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.�,