cசீனா ? இந்தியாவை அழைக்கும் அமெரிக்கா!

public

ஜூன் மாதம் நடைபெறவிருந்த ஜி-7 மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மாநாட்டுக்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் அழைக்கத் திட்டமிட்டுள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து, சீனாவுடன் வலுத்து வரும் மோதல் மற்றும் உலக சுகாதார அமைப்பு உடனான உறவு துண்டிப்பு என அமெரிக்கா பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் அதிபர் ட்ரம்ப், ஜி-7 மாநாட்டை ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜூன் 10 முதல் 12ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிட்டிருந்த மாநாடு இந்த வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஜூன் இறுதிக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் விண்வெளிக்குச் செல்லும் நிகழ்வைப் பார்த்துவிட்டு வாஷிங்டனுக்கு விமானம் மூலம் மீண்டும் திரும்புகையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ஜி 7 மாநாட்டைச் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்க இருப்பதாகவும், ரஷ்யா, தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளையும் மாநாட்டிற்கு அழைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு, ஜி 7 மாநாடு என்பது உலகில் என்ன நடக்கிறது என்பதை முறையாக வெளிப்படுத்தும் மாநாடாக இல்லை என்று நான் கருதுகிறேன். காலாவதியான நாடுகளைக் கொண்ட மாநாடு போல் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தகவல்தொடர்பு இயக்குநரான அலிசா அலெக்ஸாண்ட்ரா பாரா, ஜி 7 மாநாட்டுக்குப் பாரம்பரிய உறுப்பு நாடுகள் அழைக்கப்படும். அதில் வரும் காலத்தில் சீனாவுடனான அணுகுமுறை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் அதிபர் அலுவலகம், வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் வரை ஜி 7 மாநாட்டில் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் கலந்து கொள்ளமாட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட வளர்ந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் ஜி7 நாடுகளில் அங்கம் வகிக்கின்றன. இதில் பொருளாதார பிரச்சினைகள் , வர்த்தகம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் இடம்பெற்றுள்ள நாடுகளைத் தவிர மற்ற ஓரிரு நாடுகளின் தலைவர்களைச் சிறப்பு விருந்தினர்களாக மாநாட்டுக்கு அழைக்கலாம். அந்த வகையில் கடந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு அமெரிக்காவில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்துகொள்ள இந்தியாவையும் அழைக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

**-கவிபிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *