இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 24 ஆம் தேதி இரு நாள் பயணமாக இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்று (பிப்ரவரி 25) டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
டிரம்ப் டெல்லியில் இருக்கும் நேரம் சிஏஏ போராட்டக் காரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் இதுகுறித்து டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “ பிரதமர் நரேந்திர மோடியுடன் இது குறித்து விவாதித்தேன். மக்களுக்கு மத சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். டெல்லியில் நடந்த வன்முறைகள் இந்தியாவின் பிரச்சினை. நாங்கள் மத சுதந்திரம் பற்றி பேசினோம். . தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன், ஆனால் நான் அதைப் பற்றி விவாதிக்கவில்லை. இது இந்தியாவுக்குள்ளான பிரச்சினை” என்றார் டிரம்ப்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்த நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, நான் அதைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை, அதை இந்தியாவிடமே விட்டுச் செல்ல விரும்புகிறேன். அவர்கள் இந்திய மக்களுக்காக சரியானதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். ” என்று கூறினார்
டிரம்ப்பின் கருத்து மோடிக்கு பெரும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
**-வேந்தன்**�,”