pஹவ் டூ இம்ப்ரஸ் சீன அதிபர்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

ரொம்ப நாளா ஒரு பொண்ணு மேல எனக்கு தெய்வீகக் காதல். ஆனா எப்படி இம்ப்ரஸ் பண்றதுன்னு தான் தெரியல. லெட்டர்ல எழுதி குடுக்கலாம்னு நெனச்சா, படிச்சு புட்டு கிழிச்சு போட்டா கூட பரவால்ல ஒரு வேள படிக்காமலே தேசத்துரோக குற்றம்னு ஏதாச்சும் கேஸ போட வச்சிருவாங்களோன்னு பீதியா இருக்கு. என் உயிர் நண்பன் ஒருத்தன் கிட்ட ஐடியா கேட்டா, “மச்சான் குமாரு, கொஞ்சம் மகாபலிபுரம் பக்கம் போய் பாத்திட்டு வாடா, உனக்கு ஐடியா வரும்”ன்னு சொல்றாங்க. அங்கிட்டு போக ஒரு வாரமா பஸ்ஸ புடிக்கிறதே கஷ்டமா இருக்கு. இதில எங்க நான் போய் பாக்குறதுன்னு பொலம்பிட்டேன். “ஆனாலும் சீன அதிபர் நம்ம தமிழ்நாட்டுக்கு வறாருன்னு பாதுகாப்பும், வரவேற்பும் எல்லாம் இவ்வளவு பலமாப் பண்றத கூட ஒத்துக்கலாம். அதுக்கு ஏன்யா நம்ம ஊரு செவத்தில பூரா சைனீஸ் படமா வரஞ்சு வச்சிருக்காங்க”ன்னு கேக்குறான். எதக் கேட்டா எதச் சொல்றான். நான் போய் கூகுள் கிட்ட‘ஹவ் டூ இம்ப்ரஸ் எ கேர்ள்’ன்னு கேட்டிட்டு வரேன். நீங்க போய் அப்டேட்ட படிங்க.

**ரவிசங்கர்**

வரலாறு சிறப்புமிக்க ஒரு கூட்டத்தை தமிழக பகுதி மாமல்லபுரத்தில் நடத்துவது ஏன்..

வடக்குபக்கம்தான் வரலாறு இல்லையாமே!

**கோழியின் கிறுக்கல்!!**

எந்த செல்போன் நெட்வொர்க் Offer கொடுத்தாலும் அந்த Offer கடைசி வரைக்கும் இருக்குமான்னு தோன்றும்,

ஆனால் BSNL மட்டும் ஒரு Offer கொடுத்தா, கம்பெனி அது வரைக்கும் இருக்குமான்னு தோனுது!!

ஏன்னா நம்ம மத்திய அரசோட உருட்டு அப்படி!!!

**பழைய சோறு**

எங்களுக்கு பதினைந்து வருடத்திற்கு முன் செல்ல டைம் மெஷின் தேவையில்லை மாறாக ஒரேயொரு ரப்பர் வைத்த பென்சில் போதுமானதாக இருக்கிறது..!

**ரமேஷ்.ஏ**

பள்ளி செல்லும் வயதை பிள்ளைகள் அடைவதற்க்குள்..,அவர்களின் அழுகையை தாங்கிக்கொள்ளும் பக்குவத்தை பெற்றோர்கள் அடைந்துவிட வேண்டும்…!!!

**நட்சத்திரா**

கால்குலேட்டரிலேயே பழகும் இந்த தலைமுறையினர்க்கு மனப்பாடமாக போடும் கணக்குகள் பிரம்மிப்பாகவே தெரிகிறது.

**ஜோக்கர்**

எல்லாருக்கும்

“நல்லவனா நடக்கணும்னு” நினைக்கிறவன்தான் கஷ்டப்படுறான்,

எல்லார்ட்டயும்

“நல்லவனா நடிக்கிறவன்”

நல்லாதான் இருக்கான்…!!!

**தியோ**

வேண்டியதை கொடுத்து வேலையை முடிப்பவன்

தேவையானதை பெற்று தேவையை நிறைவேற்றுகிறான்

**Mr.கட்டெறும்பு**

ஆடு வளத்தது அழுகு பார்க்கவும் இல்ல,

கோழி வளத்தது கொஞ்சுறத்தும் இல்ல,

எல்லாம் வெட்றதுக்கு தான் குமாரு..!

-JioUsers

**அகரன்**

வாழ்வில் வளர்ச்சி பெற விரும்பினால், இளமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உழைப்பதற்குரிய இளமையே உன்னதமான காலம்.

**Mr.கட்டெறும்பு**

அன்பு திணிக்கப்பட்ட இடத்தில்

சுயம் அனேகமாக தொலைந்து போய் தான் இருக்கும்…!

**சிவா**

உன்னை நேசிப்பவர்கள் மீது அக்கறையாக இருந்தாலே போதும் உன்னை விட்டு பிரிந்தாலும் உன் அக்கறையும் அன்பும் உன்னுடன் அவர்களை சேர்க்கும்.

-லாக் ஆஃப்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment