rரயில் பாஸ்: கோவையில் குவிந்த தொழிலாளர்கள்!

Published On:

| By Balaji

தமிழகத்தில் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் இருக்கும் நிலையில்…. ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலையின்றித் தவித்து வருகிறார்கள். மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த சிறப்பு ரயில்கள் மூலமும், பஸ்கள் மூலமும், நடந்தேவும் பலர் சென்று வருகிறார்கள்.

குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். இவர்கள் மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இன்று (மே 20) உத்திரப்பிரதேசம், பீகார் செல்லும் சிறப்பு ரயில்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது என்று தகவல் பரவ, சுந்தராபுரம் பகுதியில் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் குவிந்தனர்.

அவர்களில் பலர் மாஸ்க்கும் அணியவில்லை, சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த மே 16 ஆம் தேதியும் இதேபோல பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வதற்காக கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் பாஸ் வாங்குவதற்காக தொழிலாளர்கள் குவிந்தனர். அவர்களில் ஆன் லைனில் பதிவு செய்யாமலேயே பலர் வந்ததால் போலீசார் அவர்களை லத்திகளைக் காட்டி விரட்டினர். இன்றும் அப்படி ஆகக் கூடாது என்பதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் தொழிலாளர்கள் அதிக அளவில் குவிந்துவிட்டனர்.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share