�
சீனாவின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகமெங்கும் 124 நாடுகளில் ஊடுருவியுள்ளது. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,380 ஆக அதிகரித்துள்ளது என கொரோனா குறித்த தகவல்களை வெளியிடும் வேர்ல்டோமீட்டர் (Worldometer) தெரிவிக்கிறது. பல்வேறு தரப்பிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஹாலிவுட்டின் பிரபல நடிகரான டாம் ஹாங்ஸ்சும் (Tom Hanks) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாரஸ்ட் கம்ப், அப்பல்லோ 13, இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்த டாவின்சி கோட் (The Da Vinci Code) மற்றும் இன்னும் பல ஹாலிவுட்டின் முக்கிய திரைப்படங்களின் கதாநாயகனான டாம் ஹாங்ஸ்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இன்று (03/12/2020) தனக்கு கொரோனா பாதித்திருக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர், ” நானும் என் மனைவி ரீட்டாவும் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பியுள்ளோம். உடல் சோர்வு ,சளி மற்றும் உடல் வலியுடன் லேசான காய்ச்சலும் இருந்ததால் கொரோனா பாதிப்பு குறித்த சோதனை மேற்கொண்டோம். அதில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நாங்கள் இருவரும் அடுத்தகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தனி அறையில் வைத்துக் கண்காணிக்கப்பட இருக்கிறோம். இனி தொடர்ந்து நடக்கவிருக்கும் நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கவனமாக இருங்கள் “ எனப் பதிவிட்டிருக்கிறார்.
இதையறிந்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
**பவித்ரா குமரேசன்**�,