Eடோக்கியோ ஒலிம்பிக் ரத்து?

Published On:

| By Balaji

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் என்று ஜப்பான் நாட்டு ஆளும்கட்சியின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசாங்கம் அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர், டோக்கியோவில் அதிக எண்ணிக்கையில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்று பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டோஷிஹிரோ நிகாய் அளித்த ஒரு பேட்டியில், ‘கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்து மோசமான சூழ்நிலை உருவானால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜூலை 23ஆம் தேதி தொடங்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கான சமூக தொலைதூர நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய பணிகளை அரசாங்கம் செய்து வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்குக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஆனால், இதைச் சுற்றி அதிக அளவான நிச்சயமற்ற தன்மை தற்சமயம் உருவாகியுள்ளது.

அத்துடன் கியோடோ நியூஸ், ஜப்பானியர்களிடம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் பெரும்பாலானோர் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்வதற்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி உள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த (2020) ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இந்த (2021) ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு வருகிற ஜூலை 23ஆம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், இப்படிப்பட்ட கருத்து நிலவுவது விளையாட்டு ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share