இன்று 6,785: தமிழகத்தில் 2 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

Published On:

| By Balaji

e

தமிழ்நாட்டில் புதிதாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாகப் பாதிப்பு 6ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வரும் நிலையில் மொத்த பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு நிலவரம் குறித்து இன்று (ஜூலை 24) மாலை சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், இன்று மட்டும் 65,150 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், பிற பகுதிகளிலிருந்து வந்த 56 பேர் உட்பட, மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,785 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,99,749 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஒரே நாளில் 6,504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,297ஆக அதிகரித்துள்ளது. ஜூலை 18, ஜூலை 23 ஆகிய இரு நாட்களைத் தொடர்ந்து இன்றும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,320ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 53,132ஆக உள்ளது.

சென்னையில் இன்று 1,299 பேர் உட்பட இதுவரை 92,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தொடர்ந்து, விருதுநகர் – 424, செங்கல்பட்டு – 419, திருவள்ளூர் – 378, காஞ்சிபுரம் – 349, மதுரை – 326, தூத்துக்குடி – 313், கன்னியாகுமரி -266, தேனி -234, ராணிப்பேட்டை – 222, திருச்சி – 217, கோவை – 189, தஞ்சை-186, கள்ளக்குறிச்சி-17, வேலூர் -174, திருநெல்வேலியில் 171 பேருக்கும் அதிகபட்சமாக இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share