தமிழகத்தில் புதிதாக 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்த 75 பேர் உட்படத் தமிழகம் முழுவதும் 4,538 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை இன்று (ஜூலை 17) மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 3,391 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 807 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 3 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
அதுபோன்று இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று அதிகபட்சமாக 79 பேர் உயிரிழந்ததால் மொத்தம் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47, 782 ஆக உள்ளது.
சென்னையில் இன்று 1,243 பேர் உட்பட இதுவரை 83 ஆயிரத்து 377 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
**கவிபிரியா**�,