|புதிதாக 4,526 பேருக்கு கொரோனா: 4,743 பேர் டிஸ்சார்ஜ்!

Published On:

| By Balaji

6

தமிழகத்தில் இன்று புதிதாக 4,526 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான பாதிப்பு மற்றும் இறப்பு நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (ஜூலை 14) மாலை வெளியிட்டுள்ளது. அதில், பிற பகுதிகளிலிருந்து வந்த 59 பேர் உட்பட மொத்தம் 4,526 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,47,324ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 4,743 பேர் உட்பட மொத்தம் 97,310 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று 67 பேர் உட்பட மொத்தம் 2,099 பேர் உயிரிழந்துள்ளனர். 47,912 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 16,25,558 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பாதிப்பு குறைந்து 1078 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 79,662ஆக உயர்ந்துள்ளது. மதுரை 450, விருதுநகர் 328, செங்கல்பட்டு 264, வேலூர் 194, கோவை 188, திண்டுக்கல் 157, கன்னியாகுமரி 122, விழுப்புரம் 121, திருச்சி 117, சிவகங்கை 113, தூத்துக்குடி 112, தென்காசியில் 103 பேருக்கு என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share