திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள், இலவச தரிசன நுழைவுசீட்டு ஆன்லைனில் இன்று வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெளிமாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இன்று (அக்டோபர் 22) காலை 9 மணியளவில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஒரு நாளைக்கு 12,000 வீதம் ஆன்லைனில் வெளியிடுகிறது.
அதேபோல் சாதாரண பக்தர்களுக்கு இலவச தரிசன நுழைவு சீட்டுகள் தினமும் 10,000 வீதம் ஆன்லைனில் வெளியிடுகிறது. அதற்கான நுழைவு சீட்டுகளையும் இன்று முன்பதிவு செய்யலாம். மேற்கண்ட தகவல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
**-ராஜ்**
.�,