டிக்டாக், பப்ஜி: மீண்டும் கொண்டுவரும் திட்டம் – ஒன்றிய அரசு பதில்

Published On:

| By Balaji

டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியா – சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் செப்டம்பர் 3ஆம் தேதி முதற்கட்டமாக பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட 118 சீன செயலிகளை ஒன்றிய அரசு தடை செய்தது. அதைத் தொடர்ந்து அடுத்த இரு கட்டங்களாக மேலும் 106 சீன செயலிகளுக்கும் இந்திய அரசு தடை விதித்தது.

சீன செயலிகள் இந்தியப் பயனர்களின் தகவல்களை திருட முயற்சி செய்ததாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொருட்டு இந்தச் செயலிகள் தடை செய்யப்படுவதாகவும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட சீன செயலிகள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி மலூக் நாகர் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தடை செய்யப்பட்ட சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து எந்த திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இணைய குற்றங்களைப் பாதுகாப்பான பிரவுஸர்கள் மூலம் கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய அரசு மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share