.இது ஆட்டோவா? வீடா?

Published On:

| By Balaji

பயணிகளுக்கு வசதியான மற்றும் தனித்துவமான சவாரியை அளிக்க வேண்டும் என்பதற்காக மும்பை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் பல பிரத்யேக வசதிகளை செய்து அசத்தியுள்ளார், இந்த ஆட்டோவில் செல்லும்போது வீட்டில் இருக்கும் உணர்வு இருப்பதாகப் பயணிகள் மகிழ்ச்சித் தெரிவிக்கின்றனர்.

மும்பையைச் சேர்ந்த சத்யவான் கைட் என்பவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். பயணிகளை கவரும் வகையில் இவர் தனது ஆட்டோவில் ஏற்படுத்தியுள்ள வசதிகள் நம்மை அசர வைக்கிறது. ஆட்டோவிலேயே குடிநீர், வாஸ் பேஷன், கம்ப்யூட்டர், செல்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார் சத்யவான் கைட். மற்ற ஆட்டோக்களைக் காட்டிலும் கூடுதல் வசதி செய்ததற்காக அவர் கட்டணமும் அதிகமாக வசூலிப்பதில்லை.

இதுமட்டுமின்றி மூத்த குடிமக்கள் இவரது ஆட்டோவில் பயணித்தால், ஒரு கிலோ மீட்டர் வரை கட்டணமும் வசூலிப்பதில்லை. இது மும்பையின் ஹோம் சிஸ்டம் ஆட்டோ என்று பயணிகளால் அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பயணிகளுக்கு பிடித்தமான ஆட்டோவாக இது விளங்குகிறது.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில், “நீங்கள் என்னுடைய ஆட்டோவில் செல்போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளலாம். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உண்டு. வாஸ் பேஷன் இருக்கிறது. மூத்த குடிமக்களுக்கு ஒரு கிலோ மீட்டர் வரை கட்டணம் கிடையாது. பயணிகளுக்கு சிறப்பான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வசதிகளை எல்லாம் செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்டோவின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள மகாராஷ்டிரா முன்னாள் நடிகை ட்விங்கிள் கண்ணா, இது ஆச்சரியமானது என்று தெரிவித்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share