திருப்பதி: 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்!

public

கொரோனாவால் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மூடப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தானம் தற்போது திறக்கப்பட்டு மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக வார இறுதியில் அதிக கூட்டம் வருவதால் அதற்கு தகுந்த ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்த நிலையில் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இந்த வார இறுதியில் அளவுக்கு அதிகமாக பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்காக வந்தது. இந்த நிலையில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு, கூடுதல் பக்தர்களை தரிசனத்திற்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து நடைபாதை வழியாக அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில், பக்தர்களை தங்கவைக்கும் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் நிரம்பி வழிந்ததால், பகதர்கள் சுமார் 15 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்று அலுப்படையாமல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் தினமும் 300 ரூபாய் ஆன்லைன் தரிசனத்தில் 25,000 பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலம் 70,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர்.
அதிக பக்தர்கள் வருகையால் உலகம் முழுவதிலிருந்தும் காணிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் வெளிநாட்டு நாணயங்களும் அடங்கும். இந்த நிலையில் திருப்பதியில் காணிக்கையாக செலுத்தப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை மின்னணு ஏலம் விடப்போவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காணிக்கையாகக் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் அடுத்த மாதம் ஜூன் 16, 17 ஆகிய இரண்டு தினங்களில் மின்னணு ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0