oதிருப்பதி: இலவச தரிசன டிக்கெட் நிறுத்தம்!

Published On:

| By admin

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் செய்வதற்காக திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சத்திரம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மூன்று இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.
தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 12) தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.12ஆம் தேதி (இன்று) தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் நாளை (ஏப்ரல் 13) தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 12) மதியத்துக்கு பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் பக்தர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனால் நாளை (ஏப்ரல் 13) முதல் தொடர்ந்து விடுமுறை நாட்களாக வருவதால் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட இலவச தரிசன டிக்கெட் மீண்டும் வழங்கப்படுமா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

**ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share