ரிலாக்ஸ் டைம்: தினைப் பாயசம்!

Published On:

| By Balaji

பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நிலம் வாழ் மக்களின் முக்கிய உணவாக தேனும் தினை மாவும் இருந்திருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் அரிசி, கோதுமை போன்ற தானியங்களைத் தவிர்த்து பல வகையான சிறு தானியங்களை உணவாக உட்கொள்வது நல்லது. அதற்கு இந்த தினைப் பாயசம் உதவும்.

**எப்படிச் செய்வது?**

100 கிராம் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இதை 200 கிராம் தினையுடன் சேர்த்து அரை லிட்டர் தண்ணீர்விட்டு குக்கரில் குழைய வேகவிடவும். பிறகு வேகவைத்த தினைக் கலவையுடன் 300 கிராம் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். வெல்லம் நன்கு கரைந்தவுடன் கொஞ்சம் தண்ணீரை இதனுடன் சேர்த்து பாயசப் பதத்துக்குக் கொண்டுவந்து மறுபடியும் கொதிக்கவிடவும். பிறகு நெய்யில் தேவைக்கேற்ப முந்திரி, திராட்சையை வறுத்து இதனுடன் சேர்க்கவும். பின்னர் ஒரு கப் தேங்காய்ப்பால் மற்றும் சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து மறுபடியும் ஒரு கொதிவிட்டு இறக்கவும். சத்தான, சுவையான தினை பாயசம் ரெடி.

**சிறப்பு**

நார்ச்சத்து நிறைந்த தினை, மலச்சிக்கலை நீக்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாக இந்த தினையை கஞ்சியாகச் செய்து ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள தாய்மார்கள் கொடுக்கிறார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share