ரிலாக்ஸ் டைம்: தேங்காய் வடை!

Published On:

| By Balaji

படையலுக்காக உடைக்கப்பட்ட தேங்காய் சில நேரங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் இந்தத் தேங்காய் வடை செய்து ரிலாக்ஸ் டைமில் சுவைக்கலாம்.

**எப்படிச் செய்வது?**

இரண்டு கப் தேங்காய்த் துருவலுடன் மூன்று பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, மூன்று டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து நீர்விட்டு கெட்டியாக, நைஸாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு டீஸ்பூன் இஞ்சித் துருவல், இரண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லித்தழை, ஒரு டீஸ்பூன் சீரகம், ஆறு டேபிள்ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

**சிறப்பு**

தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைப்பதோடு, எலும்புகளையும் வலுப்படுத்தும் சக்தி தேங்காய்க்கு உண்டு.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share