dஅதிகாலையில் தீவிரவாதி சுட்டுக்கொலை!

Published On:

| By Balaji

ஜம்மு-காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இன்னும் பதற்றமும் பரபரப்பும் குறையாமல் காணப்படுகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ரோந்துபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(அக்டோபர் 8) அதிகாலை நேரத்தில் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து கண்டுபிடித்தனர். அந்தத் தீவிரவாதிகளைப் பிடிக்கும் நோக்கில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் அவர்களை நெருங்கும் போது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தித் தப்பிக்க முயன்றனர்.

அந்த நேரத்தில் பாதுகாப்புப்படையினர் எதிர்த்தாக்குதல் நடத்தி அந்த கூட்டத்தில் இருந்த தீவிரவாதி ஒருவனை சுட்டுக்கொன்றனர். மேலும் அவந்திபோரா பகுதியில் ஏராளமான ஆயுதங்கள் தீவிரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உயிரிழந்த தீவிரவாதி எந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பதைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தப்பிச் சென்ற தீவிரவாதிகளைத் தேடும் பணியிலும் காவலர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share