தமிழ்நாட்டில் சேதமடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்க அண்ணா பல்கலை தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது.
தொட்டாலே உதிரும் புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சென்னை திருவொற்றியூர் அரிவாகுளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு டி ப்ளாக்கில் இருந்த 24 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தது. மக்கள் முன்கூட்டியே வீடுகளை விட்டு வெளியேறியதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதில் வீடுகளையும், உடமைகளையும் இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று குடியிருப்பு தரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், மாநிலம் முழுவதும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. தற்போது, தொழில்நுட்ப வல்லுநர் குழு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அதில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 123 திட்டங்களில் கட்டப்பட்ட 22,271 குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 20,453 குடியிருப்புகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
**-வினிதா**
�,