nஆசிரியர்கள் நியமனம்: நீதிமன்றம் உத்தரவு!

public

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

முல்லை ஹைகிரவுண்ட் மு. ந.அப்துர் ரகுமான் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகமது நாசர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் பயில்கின்றனர். 18 ஆசிரியர்கள் இரண்டு ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

2019ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழிப் பிரிவுக்கு இணையாக ஆங்கில வழிப் பிரிவுகள் கொண்டுவர அனுமதி வழங்கியது. அதன்படி, எங்கள் பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்டது.

எனவே இந்த பிரிவுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும், அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததை ரத்து செய்யவும் பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மூன்று பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் அனுமதி கேட்டு முதன்மை கல்வி அலுவலரிடம் மனு கொடுத்தோம். இந்த மனுவை முதன்மை கல்வி அலுவலர் நிராகரித்துவிட்டார்.

எனவே ஆங்கில வழி பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமனத்துக்கும், கூடுதலாக மூன்று பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் எஸ் .ஆனந்தி அமர்வில் இன்று (ஜூன் 22)ன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் ஆசிரியர்களின் பணி நியமனம் இருக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக மனு அளிக்கும் போது பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையைச் சமன் செய்த பிறகே புதிய ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்க வேண்டுமென நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே இதன் அடிப்படையில் மனுதாரர் அனுப்பிய மனுவை முதன்மை கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.