�
எளிமையாக வாழ சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
மத்திய குடியிருப்பு மற்றும் நகர்புற அமைச்சகம் ஆண்டுதோறும் மக்கள் எளிமையாக வாழக் கூடிய நகரங்களின் பட்டியலை தயார் செய்து வெளியிட்டு வருகின்றது. இந்த ஆண்டும், மக்கள் எளிமையாக வாழ சிறந்த நகரங்களின் பட்டியலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களும், 10 லட்சத்துக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களும் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 111 நகரங்கள் பங்கெடுத்தன. வாழ்க்கைத்தரம் மற்றும் நகர மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளின் தாக்கத்தை மதிப்பீடும் மதிப்பீட்டு கருவியாக வாழ்க்கை குறியீட்டு எளிமை இருக்கிறது. மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை, கல்வி, ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக்கான பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
மக்கள் எளிமையாக வாழக் கூடிய நகரங்களின் பட்டியலில், பெங்களூரு முதல் இடத்திலும், புனே இரண்டாம் இடத்திலும், அஹமதாபாத் மூன்றாம் இடத்திலும், சென்னை நான்காம் இடத்திலும் உள்ளது. பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சிம்லா முதலிடத்திலும், புவனேஸ்வரம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
தமிழக மாவட்டங்களில் கோவை ஏழாம் இடத்திலும், சேலம் 15வது இடத்திலும், வேலூர் 16ஆவது இடத்திலும்,திருச்சி 20 ஆம் இடத்திலும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,