iடாஸ்மாக்: மது விற்பனை நேரம் நீட்டிப்பு!

Published On:

| By Balaji

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக மது விற்பனை நடந்து வருகிறது. எனினும், மது வாங்கிவிட்டவர்கள் திருப்பி அளிக்கும் டோக்கனை மீண்டும் சுழற்சி முறையில் விட்டு நாள் ஒன்றுக்கு சுமார் 1,500 பேருக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ. 133.1 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ. 5.6 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ. 32.5 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ. 34.8 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ. 29.6 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ. 30.6 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மேலும் 2 மணி நேரம் கூடுதலாக மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதாவது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த மது விற்பனை தற்போது 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இரவு 7 மணி வரை விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகளை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share