bதமிழகம் : புதிதாக 5,890 பேருக்கு கொரோனா !

Published On:

| By Balaji

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் இன்று (ஆகஸ்ட் 14) பாதிப்பு அதிகரித்துள்ளது.

பிற நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்த 28 பேர் உட்பட மாநிலம் முழுவதும் இன்று 5,890 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு, 3,26,245ஆக அதிகரித்துள்ளது. இன்று 68,301 பேர் உட்பட இதுவரை, 35,69,453 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இன்று 117 பேர் உட்பட, மாநிலம் முழுவதும் மொத்தமாக 5,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 53,499 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 5,556 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,67,015ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில், இன்று ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ஒரே நாளில் 1,187 பேர் உட்பட மொத்தம் 1,14,260 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் 2,408 பேர் உயிரிழந்துள்ளனர்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share