தமிழகத்தில் மேலும் 4,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 5 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், கடந்த 4 நாட்களாகப் பாதிப்பு குறைந்து வருகிறது. இன்று 4,410 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 6,74,802 ஆக அதிகரித்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் 5,055 பேர் இன்று மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 6,22,458 ஆக உள்ளது. இன்று 49 பேர் உட்பட இதுவரை 10,472 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 41,872 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 1,148 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு, 1,86,667ஆக உள்ளது. சென்னையைத் தொடர்ந்து கோவையில், 395 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
**-பிரியா**�,