தமிழகத்தில் இன்று புதிதாக 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாகத் தமிழகத்தில் பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது. இன்று புதிதாக 4,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 6,65,930 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 57 பேர் உட்பட தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,371ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,117 பேர் சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,12,320 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 43,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று 1,164 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு, 1,84,429ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து கோவையில், 398 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
**-பிரியா**�,