zஇன்று 4,150: தமிழகத்தில் 1,11,151 பேருக்குப் பாதிப்பு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,150 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களாக 4ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்து ரயில் ,விமானம், கப்பல் போக்குவரத்து மூலம் வந்த 73 பேர் உட்பட மொத்தம் 4,150 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 102 பேர் உட்பட இதுவரை 12 லட்சத்து 83 ஆயிரத்து 419 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரிசோதனை மையங்களையும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தமிழக அரசு அதிகரித்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் மொத்தம் 95  மையங்கள் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 2,186 பேர் உட்பட இதுவரை 62 ஆயிரத்து 778 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இன்று 60 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 1, 510ஆக அதிகரித்துள்ளது . மருத்துவமனையில் 46,860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையைப் பொருத்தவரை இன்று 1,713 பேர் உட்பட மொத்தம் 68 ஆயிரத்து 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று திருப்பத்தூர் மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் மட்டும் இன்று 307 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share