`தமிழகம் : புதிதாக 1,989 பேருக்கு கொரோனா!

Published On:

| By Balaji

தமிழகத்தில் இன்று புதிதாக 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேர பாதிப்பு நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறை இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு, 40,698லிருந்து 42,687ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,989 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,91,817 பேருக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆய்வகங்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 79ஆக உள்ளது. இன்று 1,362 பேர் உட்பட இதுவரை 23,409 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 397ஆக இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 18,878ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, 27 மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 1,484 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 30,444ஆக உள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share