தமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று மட்டும் 4,231 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிற நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து கடல், வான், தரைவழி போக்குவரத்து மூலம் வந்தவர்கள் உட்பட 3,680 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,30,261 ஆக அதிகரித்துள்ளது.
46,105 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொற்றிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,829 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலும் இன்று பாதிப்பு குறைந்துள்ளது. ஒரே நாளில் 1,205 பேர் உட்பட மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,969 ஆக உள்ளது. மதுரையில் 5,482 பேருக்கும், செங்கல்பட்டில் 7,635 பேருக்கும் மொத்தமாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
**-கவிபிரியா**�,