p
தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பு ,5000த்தை நெருங்கியுள்ளது. ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், உத்தரப் பிரதேஷ், டெல்லி, கர்நாடகா, கேரளா என பிற பகுதிகளிலிருந்து வந்த 77 பேர் உட்பட மொத்தம் 4,979 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று வரை 84 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதிதாக 1,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 85 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து, திருவள்ளூரில் 405 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக்கும், விருதுநகரில் 265 பேருக்கும், மதுரையில் 206 பேருக்கும் அதிகபட்சமாக இன்று (ஜூலை 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,059 பேர் உட்பட ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்று தினங்களாகத் தமிழகத்தில் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று 78 பேர் உட்பட இதுவரை 2,481 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சோதனை மையங்கள் 112 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18 லட்சத்து 55 ஆயிரத்து 217 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
**கவிபிரியா**�,