தமிழகத்தில் இன்று 3882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்து வருகிறது. முதல்நாளில் 3509 பேருக்கும், அடுத்ததாக 3,645, 3,713, 3,940, 3,949, 3,943 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு சீனாவைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று மேலும் 3882 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. இன்று 30 ஆயிரத்து 571 பேர் உட்பட மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்து 193 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2852 பேர் உட்பட மொத்தம் 52 ஆயிரத்து 926 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 63 பேர் உட்பட மொத்தம் 1264 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் ஒரேநாளில் 2,582 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த மதிப்பு 60 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக மதுரையில் இன்று 297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2858 ஆக அதிகரித்துள்ளது.
**-கவிபிரியா**�,