fதமிழகம்: ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா!

Published On:

| By Balaji

தமிழகத்தில் p கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாகத் தமிழகத்தில் 1000 பேருக்கும் அதிகமாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் 1,064 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என மொத்தம் சேர்த்து பாதிப்பு 1,149 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333ஆக அதிகரித்துள்ளது. இன்று 757 பேர் உட்பட இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,757 ஆக உள்ளது. ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்திருக்கிறது.

அதுபோன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 9400 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று 804 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 14, 802ஆக அதிகரித்துள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share