தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தால் கடந்த சில நாட்களாக கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட பல நகரங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 105ஐ கடந்து பதிவானது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக, இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன்படி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனினும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share