தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நவம்பர் 30 ஆம் தேதியோடு ஓய்வுபெறுவதால், அவரையடுத்து தமிழக அரசின் மிக முக்கியமான இந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வசம் இருக்கும் துறைகளில் முக்கிய துறையான காவல்துறையை உள்ளடக்கிய துறை உள்துறை என்பதால் யார் அடுத்த உள்துறைச் செயலாளர் என்பது அதிகார வட்டாரங்களில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
ஏற்கனவே மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் அக்டோபர் 30 ஆம் தேதி [வெளியிட்ட செய்தியில்]( https://minnambalam.com/k/2019/10/30/46/new-home-Secretary-tamilnadu-race-3-officials,) இப்பதவிக்கு நிலவும் போட்டி பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்,
வேளாண் துறை முதன்மைச் செயலாளராக உள்ள சுகன்தீப் சிங் பேடி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், முன்னாள் உள் துறைச் செயலாளர் அபூர்வா வர்மா உள்ளிட்ட 3 அதிகாரிகளின் பெயர் புதிய உள் துறைச் செயலாளர் பதவிக்கான பரிசீலனையில் இருந்து வந்த நிலையில், இப்போது கொங்கு அதிகார வட்டாரத்திலிருந்து மேலும் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அதாவது முதல்வர் வகிக்கும் துறையான நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக உள்ள எஸ்.கே.பிரபாகர், பொது மற்றும் மறுவாழ்வுத்துறைச் செயலாளராகவும், முதல்வரின் செயலாளர் (III) ஆகவும் இருக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் செந்தில்குமார் ஐஏஎஸ் பெயரும் உள்துறை செயலாளர் பதவிக்கு அடிபடுவதாக கோட்டையில் இருக்கும் கொங்கு அதிகாரிகள் மத்தியில் பேச்சிருக்கிறது.
டாக்டர் செந்தில்குமார் 1995 ஆம் ஆண்டு கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. நாமக்கல்லைச் சேர்ந்தவர், முதல்வரது வட்டாரங்களில் நல்ல தொடர்புள்ளவர் என்கிறார்கள்.
�,”